நடிகர் விஜய் நடித்து வரும் அவரது 60-வதாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு, சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.


பரதன் இயக்கும் இந்த படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமைய்யா, டானியல் பாலாஜி, ஜெகபதி பாபு, அபர்ணா வினோத், சதிஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 


ஹைதராபாத்தில் நடைபெற்ற வந்த முதற்கட்ட படப்பிடிப்பை அடுத்து படக்குழுவினர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு பகுதியில் படப்பிடிப்பை நடத்தினர். 


இதையடுத்து, இன்று சென்னை, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் விஜய் நடிக்கும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன.


మరింత సమాచారం తెలుసుకోండి: