சென்னை:
அவரா? இவரா?... இல்ல இவரா? அவரா? குழப்பத்தில் கும்மி அடித்து வருகிறார் இவர்.


யார் தெரியுங்களா? அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த "தெறி"... வசூலில் மற்ற படங்களை தெறிக்க விட்டு சோலோவாக கல்லா கட்டியது. 


இந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இவர்தான் நடிக்க போகிறார் என்று விஜய், அஜித், சூர்யா, மகேஷ் பாபு என்று பல நடிகர்களின் பெயர் பட்டியலை வாசித்தார்கள். இப்போ சிவாஜி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய்-அட்லீ கூட்டணி இணையவுள்ளதாக முடிவாகிவிட்டது.


இருந்தாலும்... இப்ப ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. சூர்யாவிடம் அட்லீ ஓர் கதையை சொல்ல கதை ஓகே ஆகிடுச்சாம். அதனால் அவர் தன்னோட அடுத்த படமா அட்லீ படத்தில் நடிக்க ஓகே சொல்லிடுச்சாராம். இப்போ... அவரா? இவரா? எவர் என்று குழப்பத்தில் கும்மி அடித்து வருகிறாராம் அட்லீ... அட்லீ... ஏன் லீ...?


మరింత సమాచారం తెలుసుకోండి: