கண்களுக்கு வேலை அதிகமானால், கருவளையங்கள் உண்டாகும். முந்தய காலத்தை போல இப்போது இல்லை. கம்ப்யூட்டர், மொபைல் உள்ளிட்டவையின் பயன்பாடுகள் அதிகரித்ததால், கண்ணுக்கு வேலை அதிகம். இதனால கண்கள் விரைவில் களைப்படைந்து, கருவளையத்தை ஏற்படுத்துகிறது.


இதை சரி செய்ய பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை நாம் இப்போது பார்க்கலாம். 


1. கண்களை மூடி மூச்சை நன்றாக ஐந்தாறு முறை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் கண்கள் பொலிவாக காணப்படும். 


2. வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை வட்டமாக வெட்டி, கண்களை மூடிய படி, ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். 


3. தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூங்கி வந்தால், கண்களில் கருவளையம் வருவதை தடுக்கலாம். 


4. குளிர்ந்த நீரால், கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். 


5. வெயிலில் செல்லும் பொது, கூலிங் கிளாஸ் அணிந்தால், கண்களில் கருவளையம் ஏற்படாது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: