சென்னை:
வெகு காலத்திற்கு பிறகு கபாலி படம் மட்டுமே செம வசூலுடன் 25 நாட்கள் அட்டகாச ஓட்டம் ஓடியுள்ளது.


கபாலி படம் வெளியாகி நேற்றோடு 25 நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் பல தியேட்டர்களில் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக கல்லாவை ரொப்பி வருகிறது. பாக்ஸ் ஆபீஸையே தன் பக்கம் வைத்து விட்டார் கபாலி என்றால் மிகையில்லை.


முதல் 2 வாரங்கள் திரையிட்ட அனைத்து அரங்குகளிலுமே ஹவுஸ் புல்லாக ஓடியது கபாலி. வெளிநாடுகளிலும் இதே நிலைதான். வசூலில் மகா மெகா கிங் என்ற பெயர் பெற்று ஏராளமான சாதனைகளை உடைத்துவிட்டது கபாலி படம்.


கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீண்டும் கபாலி காட்சிகளை அதிகரித்தன மல்டிப்ளெக்ஸ்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்க.
நேற்று இந்த படத்தின் 25வது நாள். இரண்டாவது மூன்றாவது முறை என ரிப்பீட்டட் ஆடியன்ஸ் கபாலிக்கு வருகின்றனர். ரொம்ப நாளைக்குப் பிறகு உண்மையான 100 வது நாள் காணப்போகும் படமாக கபாலி இருக்கலாம் என்கின்றனர் கோலிவுட் வாசிகள்... இதுவும் கபாலி சாதனைதானே!


మరింత సమాచారం తెలుసుకోండి: