தமிழ் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிய நிலையில், இன்னும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. இவர் கமல் ஹாசன், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு பல திரைப்படங்கள் நடித்துள்ளார். 


இதுவரை 50 திரைப்படங்கள் நடித்த த்ரிஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மட்டும் இணைந்து ஒரு படம் கூட நடித்ததில்லை. அதனால் திரிஷா சினிமாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, எப்படியாவது ஒரு படம் ரஜினியுடன் இணைந்து நடித்து விட வேண்டும் என்பதை கனவாக கொண்டுள்ளார். 


இந்நிலையில் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் ஒரு புது படம் நடிக்கவுள்ளார். இந்த புது படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷா ஆசைப்படுகிறார். இதற்காக அவர் தனது நண்பர் தனுஷிடம், பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார். அதனால் அவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என தற்போது கோலிவுட்டில் பேசப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: