தமிழக விவசாயிகளுக்கு இப்போது வரைக்கும் அரசால் வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை யாரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ரத்துச் செய்யமாட்டோம் கவலைப்படாதிர்கள் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகத்திற்கு காரணம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்த, தமிழக அரசு தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் அதன் விளைவால், பம்பு செட்டுகளில் மீட்டர் பொருத்தி கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக விவசாயிகள் மத்தியில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைக் குறித்து அமச்சர் நாங்கள் இலவச மின்சாரத்தை ரத்துச் செய்ய மாட்டோம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அரசு இலவச மின்சாரத்தை தடுத்து நிறுத்தாது. மின்சாரம் ரத்து என்று பரவுவதை யாரும் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்தார்R
click and follow Indiaherald WhatsApp channel