சென்னை:
மாஸ் அண்ட் கிளாஸா விஜய்க்கு ஒரு படம் கிடைத்தால் எப்படி இருக்கும்... பின்னி பெடல் எடுத்து விட மாட்டார். அந்த மாதிரி ஒரு கூட்டணி உருவாக போகுதுன்னு அண்ணாச்சி கோலிவுட் ஆறுமுகம் சொல்றாருங்க...


விஷயம் என்னன்னா? விஜய் தற்போது பைரவா படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது என்கின்றனர். இதற்கு பிறகு யாருடைய படம் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


அதற்குள் கத்திரிக்காய் முற்றி விட்டது... சந்தைக்கு வந்து விட்டது என்பதுபோல் ஒரு செய்தி விசிலடித்து பறக்கிறது. என்னன்னு தெரியுங்களா?


இயக்குனர் செல்வராகவன் விஜய்யை சந்தித்து ஒரு கதை கூறினாராம். இந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாம்.


அதனால் இந்த கூட்டணி அமைந்துவிடும். விஜய்க்கு இந்த மாஸ் அண்ட் கிளாஸாக இருக்கும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். இந்த செய்தி உண்மையானால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இதற்கு முன்பு தனுசும் என் அண்ணனின் நல்ல கதையில் நான் நடிக்க முடியவில்லை என்றால் அந்த கதை விஜய் சாருக்கு பொருந்தும் என்று சொல்லியதும் இங்கு குறிப்பிடத்தகுந்தது.


அப்போ... இந்த கூட்டணி உண்மைதானோ என்ற எதிர்பார்ப்பு இப்பவே எகிற ஆரம்பித்துள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: