சென்னை:
முடிவுக்கே இம்புட்டு கொண்டாட்டம் என்றால்... வெற்றிக்கு என்பதுதான் தற்போது கோலிவுட்டில் எல்லோரும் கேட்கும் கேள்வியாக உள்ளது.
என்ன விஷயம் தெரியுங்களா? இதோ பாருங்க... சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடித்துவந்த ரெமோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
படத்தோட போஸ்ட்புரொடக்சன் பணிகளை சீக்கிரமே முடித்து செப்டம்பர் முதல் வாரம் சென்சாருக்கு படம் போக போகுது. காரணம் வரும் அக்டோபர் 7ம் தேதி படம் ரிலீஸ்ன்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க. இப்ப என்ன செய்தாங்க தெரியுங்களா? ஷீட்டிங் முடிந்ததையே ஒரு பெரிய விழாவாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதுக்கே இப்படின்னா... படத்தின் வெற்றி விழா எப்படி இருக்குமோ?