சென்னை:
தட்டிப்பறித்தாயா... தட்டிப்பறித்தாயா... என்று பற்களை நறநறவென்று கடித்து வருகிறாராம் இவரை பார்த்து அவர் என்று அக்கட தேசத்தில் இருந்து கிளிகள் குரல் எழுப்புகின்றன.


விஷயம் என்னவென்றால்... தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகி பரபரவென்று முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார் கீர்த்திசுரேஷ். தொடரி, ரெமோ, பைரவா என்று இவரது லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில் சூர்யாவுடன் ஒருபடத்தில் நடிக்க இருக்கிறார்.


அதெல்லாம் சரி... விஷயத்து வாங்க... என்கிறீர்களா... இதோ வந்தாச்சு... இவர் தெலுங்கில் பிரபல நடிகையான ராகுல் பிரித்சிங்கின் வாய்ப்பை தட்டிப்பறித்ததுதான் தற்போது ஹாட் கேக் போல் டாக் ஆப் சிட்டி ஆகி உள்ளது.


இவர் நானியுடன் நேனு லோக்கல் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ... தெரியவில்லை... இவரை கழற்றி விட்டு கீர்த்தியை கமிட் செய்துட்டாங்களாம். இதனால் கீர்த்தி மேல் பிரித்சிங் செம காண்டில் இருக்கிராம்... இருக்காராம்... அதான் கடுப்பில் பற்களை நறநறக்க விட்டுள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: