சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்று காலை “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியடப்பட்டது. பல்வேறு வகையில் குறுகுறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிறச் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனின் வெற்றி ராசியும் இணைந்துள்ளது ரசிகர்களை குதூகலம் கொள்ளச் செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வெளியானதோடு, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ள செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 2020 ஆம் வருடத்தின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, கோவாவில் 15 நாட்கள் திட்டமிடப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் கோவாவில் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் வித்தியாசமான லுக்குடன், படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து பெரும் மர்மம் நிலவும் நிலையில், ஃபர்ஸ் லுக்கில் சிவகார்த்திகேயனை சுற்றி இருக்கும் ‘மெடிகல் சர்ஜிகல் கத்திகள்’ படத்தின் கதை என்னாவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
இப்படத்தில் தென்னிந்திய சினிமாக்களில் சமீபத்திய பரபரப்பான நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, காமெடியில் கலக்கி வரும் யோகிபாபு, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். ஸ்டைலீஷ் நாயகன் வினய் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
KJR Studios உடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இப்படத்தினை இயக்குகிறார்.சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்று காலை “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியடப்பட்டது. பல்வேறு வகையில் குறுகுறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிறச் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனின் வெற்றி ராசியும் இணைந்துள்ளது ரசிகர்களை குதூகலம் கொள்ளச் செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வெளியானதோடு, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ள செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 2020 ஆம் வருடத்தின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, கோவாவில் 15 நாட்கள் திட்டமிடப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் கோவாவில் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் வித்தியாசமான லுக்குடன், படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து பெரும் மர்மம் நிலவும் நிலையில், ஃபர்ஸ் லுக்கில் சிவகார்த்திகேயனை சுற்றி இருக்கும் ‘மெடிகல் சர்ஜிகல் கத்திகள்’ படத்தின் கதை என்னாவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
இப்படத்தில் தென்னிந்திய சினிமாக்களில் சமீபத்திய பரபரப்பான நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, காமெடியில் கலக்கி வரும் யோகிபாபு, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். ஸ்டைலீஷ் நாயகன் வினய் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
KJR Studios உடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இப்படத்தினை இயக்குகிறார்.
click and follow Indiaherald WhatsApp channel