சென்னை:
தெறிதான் முன்னிலை என்று மலையாள கரையோர குயில்கள் கூவுகின்றன. எதற்காக தெரியுங்களா?


தமிழ் சினிமாவின் மார்க்கெட் தமிழகத்தை தாண்டி கேரளாவில் மிகவும் அதிகம். அதிலும் விஜய் படங்களுக்கு அங்கு செம மவுசு. பார்த்த படத்தையை மீண்டும், மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் அங்கு ஏராளம் ஏராளம். 


இந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களிலேயே தெறி தான் கேரளாவில் வசூலை தெறிக்க விட்ட படமாம். ஆமாங்க... ரூ 16.50 கோடி வசூல் செய்து டாப் 1ல் உள்ளது. உலக அளவில் பல சாதனைகளை செய்த கபாலி படம் கூட இங்கு வசூலில் கம்மிதான். 


தெறிக்கு அடுத்தப்படியாக ரூ.16.10 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு பின்னர் சூர்யாவின் 24 ரூ.10.35 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இப்போது சூர்யா படத்தின் வசூலை முறியடிக்கும் வேகத்தில் சீயான் விக்ரமின் இருமுகன் இதுவரை ரூ 5.37 கோடி வசூல் செய்து வருகிறது. இன்னும் ஒரு சில நாளில் 24ன் சாதனையை முறியடித்து 3ம் இடம் பிடிக்கும் என்கிறார்கள். கலக்குகிறார் சீயான்.



మరింత సమాచారం తెలుసుకోండి: