கடந்த 2003-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்த 'காக்க காக்க' திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் மெகா ஹிட்டானது. இந்த படத்தை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராது இருந்தது. இந்நிலையில் தற்போது வெளிவந்த தகவலில், இந்த படத்தை 'கபாலி' தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
மேலும் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளை, கவுதம் மேனன் தற்போது மேற்கொண்டுவருவதால், விரைவில் இந்த படம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.