நடிகை காஜல் அகர்வால் கடைசியாக தெலுங்கில் எம்.எல்.ஏ என்ற பிளாப் படத்தில் நடித்தார். அதற்கு முன்னர் அவருக்கு ஒரு சிறப்பான வெற்றியாக அமைந்தது. இந்நிலையில் தற்பொழுது அவர் தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக்காகும்.

Related image

ஒரிஜினல் படத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்த வேடத்தில் தமிழில் காஜல் நடித்துள்ளார். பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் சிறு ஊரில் இருந்து சுதந்திரமாக பாரிஸ் சென்று தன்னை உணரும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். இந்த படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கில் தன்னை அறிமுகம் செய்த இயக்குனரான தேஜாவின் அடுத்த படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக நடித்து வருகிறார்.

Image result for kajal apherald

இந்த படத்தில் காஜலுக்கு கதாநாயகனுக்கு நிகரான பவர் நிறைந்த வேடமாம். சென்ற ஆண்டு தேஜா இயக்கத்தில் வெளியான அரசியல் படமான நேனே ராஜு நேனே மந்திரி படத்தில் காஜல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: