
சாமி படத்தில் தனது கவர்ச்சியான இடுப்பழகை காட்டி செக்சியான நடனங்கள் மூலம் சின்ன சிம்ரன் தமிழ் சினிமாவின் அடுத்த இடையழகி என்று புகழப்பட்ட ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார். இப்பொழுது பல ஆண்டுகள் கழித்து த்ரிஷாவும் சிம்ரனும் மீண்டும் ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளனர்.

அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்து வரும் த்ரில்லர் படத்தில் இருவரும் ரஜினியின் காதலிகளாக நடிக்க உள்ளனர். சிம்ரன் சந்திரமுகி படத்திலேயே நடித்திருக்க வேண்டியது என்றாலும் கடைசியில் அந்த வேடத்தில் ஜோதிகா நடித்தார். அதே போல நயன்தாரா சந்திரமுகி படத்தில் நடித்திருக்க பாத்திரம் த்ரிஷா நடித்திருக்க வேண்டியது.

இந்நிலையில் இப்பொழுது த்ரிஷா புதிய தோற்றத்தில் ரஜினி படத்தில் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தில் அவருக்கும் ரஜினிக்கும் டூயட் பாடல் ஒன்றும் உள்ளது என்றும் செய்திகள் வரவே கடுப்பான சிம்ரன் எனக்கும் பாட்டு வேண்டும் என்று கண்டிப்பாக கூறி வருவதால் குழப்பத்தில் உள்ளாராம் கார்த்திக் சுப்பாராஜ். எது எப்படியோ இரண்டு இடுப்பழகிகளும் ஒன்றாக சேர்ந்து கவர்ச்சி விருந்து படைத்தால் லாபம் ரசிகர்களுக்கு தான்!
click and follow Indiaherald WhatsApp channel