
எனவே தனக்கு ஹாரர் காமெடி தான் சரியான ரூட் என்று முடிவு செய்த டீகே இப்பொழுது மீண்டும் ஒரு ஹாரர் காமெடியாக காட்டேரி படத்தின் மூலமாக வரவுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கப்பல் படத்தில் நடித்த கவர்ச்சி கன்னி சோனம் பஜிவா நடித்துள்ளார்.

மேலும் இவர்கள் தவிர கருணாகரன், மற்றும் மீசையை முறுக்கு புகழ் ஆத்மீகா நடிக்க, பேயாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். சோனம் பஜிவா இந்த படத்தில் பிகினி உடையில் நடித்து கவர்ச்சி சூட்டை கிளப்பியுள்ளதால் படத்தை யூத் ஆடியன்ஸுக்கு எளிதாக கொண்டு சேர்த்திடலாம் என்று டீகே திட்டமிட்டுள்ளார். மேலும் கருணாகரனின் காமெடியும் யாமிருக்க பயமே போலவே வொர்க் அவுட் ஆனால் காட்டேரி எனும் கவர்ச்சி ஏரியும் ஹிட் தான்.
click and follow Indiaherald WhatsApp channel