தொண்ணூறுகளில் அஜித் மற்றும் விஜய்க்கு இணையாக கருதப்பட்ட நாயகன் தான் டாப் ஸ்டார் பிரஷாந்த். ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா மற்றும் பாலு மஹேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள் என்று முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்த பிரஷாந்த் கடந்த பத்து வருடத்தில் ஹிட் எதுவும் இன்றி பீல்டு அவுட் ஆகி விட்டார்.கடைசியாக ஜானி என்ற பிளாப் படத்தில் ஹீரோவாக நடித்த பிரஷாந்த் அடுத்ததாக பல ஆண்டுகள் கழித்து தெலுங்கில் மீண்டும் வரவுள்ளார். மெகா பௌர்ஸ்டார் ராமச்சரன் நடிக்க உள்ள வினயா விதேயா ராமா படத்தில் அவர் ஒரு நேர்மையான எலெக்ஷன் அதிகாரியாக நடித்துள்ளார்.இந்த படத்தில் இவரது ஜோடியாக எ விரும்புகிறேன் மற்றும் ஆயுதம் படங்களில் நடித்த ஸ்னேஹா நடித்துள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: