நடிகை த்ரிஷா கடைசியாக தமிழில் மோகினி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சென்ற மாதம் வெளியானது. அரசாங்கம் படத்தை இயக்கிய மாதேஷின் இயக்கத்தில் வெளியான இந்த பேய் பழிவாங்கல் படம் தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் த்ரிஷாவின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.



த்ரிஷா நடிப்பில் அடுத்ததாக வரவிருப்பது பிரேம்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள "96" படம் ஆகும். இந்த படத்தில் த்ரிஷா மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்துள்ளார். இப்பொழுது இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் ஆகஸ்டு இருபத்தி நான்காம் தேதி வெளியாகும் என்றும் திரைப்படம் செப்டம்பர் பதிமூன்றாம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக இதே செப்டம்பர் மதின்மூன்று விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாவதாக சிவ கார்த்திகேயன் மற்றும் சமந்தா நடிக்கும் சீமராஜா படமும் சமந்தா நடிக்கும் யூ டர்ன் படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விஜயதசமியின் பொழுது ரெமோவும் ரெக்கையும் மோதியது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: