சென்னை:
ஏழை மாணவி மருத்துவப் படிப்புக்காக ரூ.1 லட்சம் உதவி தொகையை நேரில் வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இந்த மாணவி பிளஸ்-2வில் தேர்ச்சிப்பெற்று சென்னை, கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு விண்ணப்பத்தார். அவருக்கு படிக்க இடமும் கிடைத்தது.


ஆனால் வறுமைக்காரணமாக கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல்மி குந்த சிரமப்பட்டு வருவதாக தனது நிலையை விளக்கி, மருத்துவப்படிப்புக்கு நிதியுதவி கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு மாணவி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து  மாணவியின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டு, முதல் வருட மருத்துவப் படிப்புக் கட்டணமாக 1,10,000 ரூபாயை முதல்வர் ஜெயலலிதா இன்று மாணவி பிரியதர்ஷினி மற்றும் அவருடைய குடும்பத்தினரை நேரில் வரவழைத்து வழங்கினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: