விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் 4 கோடிக்கும் அதிகமானோர் பார்ப்பதாக அந்த சேனலின் டிஆர்பி கணக்கு சொல்கிறது. அதன்காரணமாக ஏற்கனவே ஜிஎஸ்டி வரிக்கு பிறகு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், இப்போது பிக்பாஸினால் இன்னும் தியேட்டர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
![]()
மேலும், பொது மக்கள் மட்டுமின்றி சினிமாத்துறையினரின் கவனமும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சி பக்கம் திரும்பியிருக்கிறது. அவர்களும் அந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வருவதோடு அதுபற்றிய தங்களது கமெண்ட்டுகளையும் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நேயர்களைப் போலவே சினிமா நடிகர் நடிகைகளும் ஓவியாவுக்கு பலத்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஏற்கனவே காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியாவுக்கு டுவிட்டரில் தனது ஆதரவு தெரிவித்ததை அடுத்து இப்போது சிம்புவும் அவருக்கு தனது அன்பான ஆதரவை தெரிவித்துள்ளார். அதோடு, ஒருவர் மற்றவர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தால் அவரை குறை சொல்லி குத்தி ஓரங்கட்டாதீர்கள், தனியாக சுதந்திரமாக விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார் சிம்பு.
click and follow Indiaherald WhatsApp channel