சென்னை:
ஸ்பீடு... ஸ்பீடு... இதுதான் அதிமுகவின் தாரக மந்திரமாக இருக்குமோ என்னவோ தெரியலை. எந்த கட்சியும் ரெடியாவதற்கு முன்னாடியே நாங்க ரெடின்னு களத்தில் குதிக்கிறதுதான். இப்போ என்ன விஷயம்ன்னா?


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா? வாங்க வந்து விருப்ப மனு கொடுங்கன்னு அதிமுக முதல் கட்சியாக களத்தில் குதித்துள்ளது.


சேலம் மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம் வாரியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காக விருப்பமுள்ள கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனு வாங்கும் பணியும் ஸ்டார்ட் ஆகிடுச்சு. இப்படியே ஒவ்வொரு மாவட்டமாக இந்த பணி விரைவில் தொடங்கப்படுமாம். 


முதல் நாளிலேயே உள்ளாட்சி நிர்வாகத்தின் பல்வேறு பதவிகளுக்கும் விருப்பமனு கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுதாம்.



Find out more: