
'மக்கள் செல்வன் ' விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் , படத்தொகுப்பினை பிரவீன் K.L மேற்கொண்டுள்ளார் .
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை 'லிப்ரா புரடொக்க்ஷன்ஸ் ' நிறுவனம் கைப்பற்றியுள்ளது .
வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது .
தொழில்நுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் - விஜய் சந்தர்
தயாரிப்பு - பி.பாரதி ரெட்டி
ஒளிப்பதிவு - R.வேல்ராஜ்
படத்தொகுப்பு - பிரவீன் K.L
சண்டை பயிற்சி - அனல் அரசு
கலை இயக்குனர் - பிரபாகர்
நிர்வாக தயாரிப்பு - ரவிச்சந்திரன் , குமரன் .
நடனம் - ராஜு சுந்தரம் , செரிஃப் ,சாண்டி
மக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.
click and follow Indiaherald WhatsApp channel