டமாஸ்கஸ்:
சிரியாவில் உள்நாட்டுப்போரில் சுரங்க கட்டிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 38 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சிரியாவில் 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் போரிட்டு வருகின்றன. இந்நிலையில் அலப்போவில் அரசு வசம் உள்ள பகுதியில் சுரங்கம் அமைத்து உள்ளேயே கட்டிடங்கள் கட்டி அதில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக தங்கி உள்ளனர். இதுதான் கிளர்ச்சியாளர்கள் கண்ணை உறுத்த பெரும் சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது.


இந்த பகுதியில் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தை குண்டு வைத்து தகர்த்தனர். இதனால் கட்டிடம் இடிந்து நொறுங்கியது. இதில் 38 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். 


இந்த சம்பவத்திற்கு துவார் அல்-ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு பொறுப்பு ஏற்றுள்ளது. இதைவிட கொடூரம்... குண்டு வெடிப்பதை வீடியோவாக எடுத்து ஒளிபரப்பி தங்களின் இரக்கமற்ற குணத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: