சென்னை:
சிறைச்சாலைகளில் இன்னும் வைக்கிறாங்க... சிசிடிவி கேமராக்கள்... கேமராக்கள்... இனிமே அதிகாரிகளுக்கும் "ஆப்பு" தான். விஷயம் என்னன்னா?


சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வாசித்தார். அதில்தான் சிறைச்சாலைகளில் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூறி உள்ளார். விஷயம் இதுதான்.


சிறைகளின் பிரதான நுழைவு வாயில், நேர்காணல் அறை மற்றும் உயர் பாதுகாப்புத் தொகுதிகள் போன்ற முக்கியமான இடங்களில் சிறைவாசிகள், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


இந்த சிறைச்சாலைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க வேண்டிய தேவையைக் கருத்திற்கொண்டு, மேலும் 100 சி.சி. டி.வி. மற்றும் ஐ.பி. கேமிராக்கள் பொருத்தப்படும்.


திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக 8 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்துடன் கூடிய 7 கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் 23 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: