தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் பணம் தான். ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ரத்த வாரிசு என்பது தீபக் மற்றும் தீபா ஆகிய அவரின் அண்ணன் பிள்ளைகள்தான். இதில் தீபக் ஆரம்பம் முதலே சசிகலாவுடன் இருந்தார்.

அவரை தனது தாய் போன்றவர் என புகழுரைத்து வந்தார்.இந்த நிலையில், தீபாவுக்கும் ஜெயலலிதா சொத்தில் பங்கு பேசப்பட்டதாக கூறப்படுகிறது. கிடைக்கும் பங்கில் தீபாவின் கணவர் மாதவன் திருப்தியடைந்தபோதிலும், தீபாவின் கார் டிரைவரோ, தீபாவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி அவருக்கு தூபம் போட்டாராம

ஹைதராபாத் திராட்சை தோட்டம் அல்லது ரூ.100 கோடி என்ற பேரத்துக்கு மாதவன் ஓகே சொன்னாலும், தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக நினைத்துக்கொள்ளும் தீபாவோ ரூ.1500 கோடிக்கு அடிபோட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவியிடையே ஓயாத தகராறு. இதை பயன்படுத்திக்கொண்ட ஆளும் தரப்பின் முக்கிய புள்ளி ஒருவர் மாதவனை வளைத்து கைக்குள் போட்டுக்கொண்டு, கார் ஒன்றை பரிசளித்ததாக கூறப்படுகிறது. மேலும், தீபாவுக்கு எதிராக கட்சியை ஆரம்பித்து, அவரை அரசியலில் இருந்து காலி செய்ய ஐடியா போட்டு கொடுத்தாராம்