மேற்கு வங்கம்:
தொழில் போட்டி, முன்விரோதம் இதற்காக கூலிப்படையை வைத்து கொலை செய்தார்கள் என்பதை கேட்டு இருப்போம். ஆனால் தன் மகனையே கூலிப்படையை வைத்து கொன்றுள்ளார் ஒரு "பாசக்கார" தந்தை என்றால்... நம்புவீர்களா? ஆனால் நம்பித்தானே ஆகவேண்டும்.


விஷயத்தை பாருங்களேன். மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூர் ஜீன்புத் பகுதியை சேர்ந்தவர் அசோக் திரிவேதி. இவரது மகனை கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டனர்.


 போலீசார் எவ்வளவு கோணங்களில் விசாரித்தும் இந்த கொலைக்கான காரணமும், கொலையாளிகளும் சிக்கவே இல்லை. இருப்பினும் விடாது முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் போலீசாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


 இந்நிலையில் மகன் கொலை குறித்து எந்த அக்கறையும் காட்டாமல் இருந்து வந்துள்ளார் அசோக். அப்புறம் என்ன தங்களின் சந்தேகப்பார்வையை அசோக் மீது போலீசார் திருப்பினர். இதில்தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  "சிக்கினான் சேகர்" என்று சொல்வதுபோல் அசோக் வகையாக மாட்டினார். தன் மகனை கூலிப்படையை வைத்து அசோக்கே கொலை செய்தது தெரியவந்தது.


 இதையடுத்து போலீசார் அசோக் மற்றும் கொலையாளிகளை கைது செய்தனர். பின்னர் போலீசில் அசோக் கொடுத்த வாக்குமூலத்தில், 
மகனின் குடிப்பழக்கம், பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, சூதாட்டத்தில் ஈடுபடுவது ஆகியவற்றால் பல தொல்லைகள் ஏற்பட்டது. இதனால் கூலிப்படையை வைத்து மகனை கொல்ல சொன்னேன் என்று தெரிவித்துள்ளார். 


இச்சம்பவம் மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. 


Find out more: