ராமேஸ்வரம்:
ஜெல்லி மீன்களின் வரத்து அதிகமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த சில மாதங்களாக ராமேசுவரம் கடல் பகுதிகளில் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரிமாக தென்பட தொடங்கியுள்ளது. ராமேசுவரம் கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 


ராமேசுவரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடல் அலைகளின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை. தற்போது ராமேசுவரம் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகமாக காணப்படுவதால் கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.


இனப்பெருக்கத்திற்காக இப்பகுதிக்கு தற்போது அதிகளவில் ஜெல்லி மீன்கள் தொடங்கியுள்ளன. இதனால் இந்த கடற் பகுதியின் கரையோரங்களில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன்கள் தாக்கும் அபாயம் உள்ளது.



ஜெல்லி மீன்கள் மனிதனை தாக்கினால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒவ்வாமையின் காரணமாக மரணம் கூட ஏற்படலாம். எனவே கடலில் குளிக்கும் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை போதிய ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதுகுறித்து மீனவர்கள் தரப்பில் கூறுகையில், இப்படி ராமேஸ்வரம் பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் வருவது ஆபத்தாகும் என்றனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: