ஜகர்தா:
இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் கொட்டித் தீர்த்த தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் பலியான சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.


இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவியின் பல பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. அதிலும்... கருட், சுமேடாங் மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரமாக பெய்த தொடர்மழையால் பல பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் வேகம் அதிகம் இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட சுமார் 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கருட் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 6 குழந்தைகளும், 7 பெண்களும் பலியாகினர். சுமேடாங் மாவட்டத்தில் 6 பேர் பலியாகினர். இச்சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.



Find out more: