மும்பை:
ஆயுதங்களுடன் மர்மநபர்கள் நடக்கிறாங்க... நடக்கிறாங்க... பார்த்த மாணவர்கள் பயந்து போய் சொல்ல... தற்போது கடற்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவத்தினர் பலியான சம்பவத்தின் சோக வடு இன்னும் ஆறவில்லை. இதையடுத்து தொடர்ந்து நாட்டின் அனைத்து ராணுவ முகாம்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

Image result for ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்

இந்நிலையில் மும்பை கடற்படை தளம் வெடிமருந்து கிடங்கு அருகே கருப்பு உடையில் ஆயுதத்துடன் 6 மர்ம மனிதர்கள் நடமாடியதாக அப்பகுதி பள்ளி மாணவர்கள் 2 பேர் பார்த்துவிட்டு ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.


அவ்வளவுதான் பற்ற வைத்த வெடி போல் பரபரப்பு அங்கு தொற்றிக் கொண்டது. மேலும் அந்த மர்ம மனிதர்கள் வெளிநாட்டு மொழியில் பேசியதாகவும்ஓஎன்ஜிசி, ஸ்கூல் என்ற வார்த்தைகளையே திரும்ப திரும்ப கூறியதாகவும் அம்மாணவர்கள் தெரிவித்தனர்.


உடன் பள்ளி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க மும்பையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


கடற்படை ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. உரான் கடற்படை தளப் பகுதியில் அங்குலம் அங்குலமாக தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Image result for கடற்படை ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்புப்

இதனிடையே மாணவர்கள் பார்த்தது தீவிரவாதிகளை அல்ல.. வன பாதுகாவலர்களை. அவர்கள்தான் ரோந்து செல்லும் போது பச்சை நிற சீருடை அணிந்து ஆயுதங்களுடன் செல்வார்கள். அவர்களைப் பார்த்துதான் மாணவர்கள் தீவிரவாதிகள் என கூறியிருக்கக் கூடும் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இருப்பினும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



మరింత సమాచారం తెలుసుకోండి: