தெலுங்கு போதைப் பொருள் வழக்கில் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து நடிகை காஜல் அகர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ஜானி ஜோசப் என்கிற ரோன்னி தன் வீட்டில் போதைப் பொருள் வைத்திருந்த காரணத்தால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் வீட்டில் இருந்து போதைப் பொருள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த காஜல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ரோன்னி சம்பவம் குறித்து அறிந்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். சமூகத்திற்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் நான் சத்தியமாக ஆதரவளிப்பது இல்லை. என்னிடம் வேலை செய்பவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இல்லை. என் கெரியரை என் பெற்றோர் நன்கு கவனித்து வருகிறார்கள்.

என்னிடம் வேலை செய்பவர்கள் பணி நேரம் முடிந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு சுத்தாமா தெரியாது என்று தெரிவித்துள்ளார் காஜல்
click and follow Indiaherald WhatsApp channel