சென்னை:
டீசர் இல்ல... டிரெய்லர் இல்லை... இசை வெளியீடு இல்ல... ஆனா வியாபாரம் மட்டும் ஸ்டார்ட் ஆகிடுச்சே... எப்படி? இதுதான் கோலிவுட்டில் ஆச்சரியமாக கேட்கப்படும் கேள்வியாக உள்ளது.


விஷயம் இதுதாங்க... ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே பர்ஸ்ட்லுக், டீசர், டிரெய்லர், இசை வெளியீடு ஆகியவை நடக்கும். இதை வைத்துதான் படத்தின் வியாபாரம் அமையும். இதுதான் இத்தனை ஆண்டுகளாக நடந்து வரும் விஷயம்.


ஆனால் ஆனால் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தின் வியாபாரம் இப்போதே தொடங்கி விட்டதாம். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சேலம் சிவா அவர்கள் எம்ஜி முறையில் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எப்படிங்க... எல்லாம் நம்பிக்கைதான் என்கின்றனர். எப்படியோ... நம்பிக்கை அருமையாக இருந்தால் சரிதான்...


మరింత సమాచారం తెలుసుకోండి: