பிரபல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 40வது வருடாந்திர கூட்டத்தில் இதன் பெரியத் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ போன் குறித்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டு, அதனை அறிமுகம் செய்து வைத்தார். இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் ரொம்பப் பெரிய அளவில் உயர்ந்து, போட்டி நிறுவனங்களான ஐடியா, ஏர்டெல் ஆகியவற்றைப் தும்சம் பண்ணியது.

முகேஷ் அம்பானி அறிவித்தத்த திட்டத்தில் மிகப்பெரிய மோசடி ஒன்று ஒழிந்திருக்கிறது. இவர் அறிவித்த 4ஜி பியூச்சர் போன் திட்டம் வரி ஏய்ப்புச் செய்யக் கூடியதாக உள்ளது அதைப் பார்ப்போம். முகேஷ் அம்பானி வெறும் 1,500 ரூபாய் டெப்பாசிட்க்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்பது தான் தற்போது வெடித்துள்ள மிகப்பெரிய பூகம்பம். மூன்று வருடத்திற்குப் பிறகு செக்யூரிட்டி டெப்பசிட் பணத்தினை திருப்பி வாடிக்கையாளர்கள் போனை திருப்பி அளிக்கும்போது மட்டுமே டெப்பாசிட் பணத்தை ஜியோ திரும்ப அளிக்கிறது என்று சொல்லுகிறது. இத்தகைய செக்யூரிட்டி டெப்பசிட் பணத்திற்கு ஜிஎஸ்டி வரித்திட்டத்தின் கீழ் எவ்விதமான வரியுமில்லை. இவ்வளவு பணத்தினை மக்களிடம் இருந்து நைஸாக பெற்று தனது வணிகத்தினை அம்பானி பல மடங்கு பெருக்குவார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மத்திய அரசுக்கு செக்யூரிட்டி டெப்பசிட் பெற்றுவிட்டு அதனைத் திருப்பி அளிப்பதினால் ஜிஎஸ்டி வரியினைச் செலுத்த வேண்டியது இல்லை. இதன் மூலம் மத்திய அரசுக்குத் தான் வரிப் பணம் கோடிக்கணக்கில் நஷ்டம்.

இதனை ஜிஎஸ்டியில் வரியை அமலாக்கம் செய்யும்போதே யோசித்திருக்க வேண்டும். மத்திய அரசு இதில் மிகப்பெரிய ஓட்டை வைத்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு, ஜியோ செய்யும் மொபைல் விற்பனையின் மூலம் 22,500,000,000 ரூபாய் (2,250 கோடி ரூபாய்) வரி பணம் நஷ்டம்.
click and follow Indiaherald WhatsApp channel