இந்த ஆலயம் நாகர்கோயில் அருகே உள்ள தக்கலை ஊரின், பக்கத்தில்  அமைந்துள்ளது. இக்கோயிலை குமாரகோயில் என்று அழைப்பார்கள். இங்கு முருக பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.


மேலும், வள்ளி, விநாயகர், ஆறுமுக நயினார் மற்றும் நடராஜ பெருமான் ஆகியோரும் அருள் புரிகிறார்கள். இத்தளத்தில் முருகப்பெருமானுடைய வாகனமான மயில் அதிகளவில் காணப்படுகிறது. இங்கு வேங்கை மரமும் உள்ளது.


திருமணம் கைகூட விரும்புபவர்கள், கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியர்கள், கடன் பிரச்சனையால் தவிப்பவர்கள், வாழ்க்கையில் துன்பங்களை மட்டுமே, எப்போதும் சந்திப்பவர்கள், குழந்தை வரம் வேண்டுவோர் உள்ளிட்டோர் இக்கோயிலிற்கு வந்து வழிபட்டால், வேண்டி கேட்டது கிடைக்கும்.


இத்தளத்தில் தினமும் பூஜை நடைபெறுகிறது. மேலும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, இதேபோல் மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை சன்னதி திறக்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: