பீஜிங்:
திபெத்திய மக்கள் அதிக நாட்கள் உயிர்வாழ என்ன காரணம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. என்ன விஷயம்ன்னா!


சீனாவில் மற்ற பகுதிகளை விட திபெத்தில் வசிக்கும் மக்கள் அதிக காலம் உயிர்வாழ்கிறார்கள். அங்கு 60 வயதுக்கு மேற்பட்டோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 100 வயதுக்கு மேலும் ஏராளமானோர் வாழ்கிறார்கள். இது எப்படி... 


சீனாவில் மற்ற பகுதிகளில் இந்த அளவுக்கு மக்கள் அதிக காலம் உயிர் வாழ்வதில்லை. இது எதனால்? இந்த கேள்வி எழுந்த உடனேயே விஞ்ஞானிகள் களத்தில் குதித்தனர். ஆய்வுகள் பரபரத்தன. 


இது சம்பந்தமாக சீனாவில் உள்ள அறிவியல் அகாடமி உயிர்விஞ்ஞானம் கல்லூரி பேராசிரியர்கள் ஷாங்யாபிங், வூடாங்டாங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில்தான் அதிக ஆண்டுகள் திபெத்திய மக்கள் வாழ்வதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.


திபெத் பகுதியில் குறைவான ஆக்சிஜன் கிடைப்பதே அவர்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்வதற்கு காரணமாம். உலகிலேயே திபெத் தான் உயரமான பகுதியாகும். கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரத்து 800 மீட்டர் உயரத்தில் திபெத் பகுதி அமைந்துள்ளது.


பூமியின் மற்ற பகுதிகளை விட ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது. எனவே திபெத் மக்களுக்கு சுவாசிப்பதற்கு போதிய ஆக்சிஜன் கிடைப்பதில்லை.


அதே நேரத்தில் குறைந்த ஆக்சிஜனே இருந்தாலும் சிறப்பாக உயிர்வாழும் அளவுக்கு அவர்களுடைய உடலில் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதுதான் அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: