இதயத்தை பாதுகாப்பதில் அவரைக்காயிற்கு முக்கிய பங்கு உண்டு. இதன் நற்குணங்களை, நாம் இன்றைய ஆரோக்கிய தகவலில் பார்க்கலாம். 


இதயத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குவதில், அவரைக்காயிற்கு முக்கிய பங்கு உண்டு. 


ரத்த சோகை உள்ளவர்கள், அவரைக்காய் உண்டால் நல்ல பலன் கிட்டும். 


அவரைக்காயில் நார்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதை உண்பதனால் மலசிக்கல் பிரச்சனைகள் தீரும்.


கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில், கருவின் மூளை வளர்ச்சிக்கு, தாய் அவரைக்காய் உண்பது மிகவும் நல்லதாகும். 


அவரைக்காயில் பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகள் இருப்பதனால், நம் உடலின் அமிலங்கள் மற்றும் நீரை சீராக, அளவோடு வைத்திருப்பதில் உதவி செய்கிறது. 


அவரைக்காயில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்திருப்பதால், நம் உடலில் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவும்.


அவரைக்காயில் கணிசமான கால்சியம் சத்து இருப்பதால், எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.


மேலும் உடல் எடை மெலிய நினைப்பவர்கள், அவரைக்காயை உணவில் சேர்த்து வருவது நல்லது. இது தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி, உடல் எடையை குறைக்க செய்யும்.



మరింత సమాచారం తెలుసుకోండి: