சென்னை:
ஆட்ட நாயகர் இப்போது நடிதது வரும் பேய்ப்படத்தில் முன்னாள்... காதலி... முன்னாள் காதலியின் சேப்டரும் வருதாம்... வருதாம்...


நடனம் ஸ்டார்ட்டிங்கா இருந்தாலும், நடிப்பு, டைரக்சன்னு தமிழ், தெலுங்கு, இந்திவரை கலக்கியவர். இப்போ தயாரிப்பும் தொடங்கிட்டார் இந்த ஆட்ட நாயகர். 


தற்போது பேயை மையமாகக் வைத்து ஒரு படத்தில் நடிக்கிறார். இப்ப உள்ள டிரெண்டே பேய்தானேப்பா... அது விஷயமில்லை. இதை இயக்குவது நடிகையின் கணவர். இப்படத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் இயக்கி வருகிறார். 


இதில்தான் இருக்கு டுவிஸ்ட்... என்ன தெரியுங்களா? ஆட்ட நாயகரின் மாஜி காதலியின் கதைதான் இதில் ஒரு பார்ட்டா வருதாம். ஏன் இந்த "வம்பு" ஆட்ட நாயகரே என்று முணுமுணுக்கிறது கோடம்பாக்கம்.


திருமணம் வரை வந்த இவர்கள் இருவரின் காதலும் நின்று போனது ஊரறிந்த விஷயம். அப்புறம் பிரிந்த இந்த ஆடுகள் தங்கள் வழியில் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். அப்படி இருக்க இப்ப இப்படி இது தேவையா என்கின்றனர் கோடம்பாகத்து கோபாலுக்கள். படம் ஹிட்டடிக்க இதை சேர்த்து இருக்காங்களாம்ப்பா... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... என்னவோ? போங்கப்பா!


Find out more: