ஆந்திரா:
நம்பினார் கெடுவதில்லை... நம்பினார்... கோடிகளை அள்ளிவிட்டார் என்றுதான் கூற வேண்டி உள்ளது. யார்? யாரை நம்பினார்கள் தெரியுங்களா?
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் குறைந்த பட்ஜெட்டில் அமோக அறுவடையை தமிழில் அள்ளி அள்ளிக் கொடுத்தது தெரிந்த கதைதான். இந்த படத்தைதான் நம்பி வாங்கி தெலுங்கில் டப் செய்தார் லட்சுமணன் சதலவாடா.

பிச்சைக்காரனை நம்பியவர் விளம்பரத்திற்கு 1.5 கோடி, படத்திற்கு ரூ.50 லட்சம் என்று ரூ.2 கோடியை அள்ளி வீசினார். இப்ப அறுவடை செய்து கொண்டிருக்கிறார். எப்படி ஒன்றரை கோடி, படத்திற்கு 50 லட்சம் என மொத்தமாக 2 கோடிகளை செலவு செய்திருந்தார். தற்போது படம் வசூலை அள்ளிக்குவிக்க ரூ.15 கோடி இவருக்கு இப்போ சொந்தம். செலவு போக ரூ.13 கோடிகள் எண்ண முடியாமல் எண்ணி வருகிறார்.