மும்பை: 
மனைவிக்காக... என் மனைவிக்காக... என்று பாலிவுட்டையே மூக்கில் விரல் வைக்க செய்துள்ளார் ஒரு கணவர். என்ன விஷயம் தெரியுங்களா?


இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் நகரில் வசிப்பவர் முசாபிர். இவருக்கும் கீதாஞ்சலி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்ததுச்சு.


இவருடைய மனைவி நடிகர் சல்மான்கானின் ரசிகை. இதனால் தன் புதுமனைவியை இம்ப்ரஸ் செய்ய காத்திருந்தார்... முசாபிர். அந்த நாளும் வந்தது. சல்மான்கான் நடித்த சுல்தான் வெளியானது. இவர் என்ன செய்தார் தெரியுங்களா? தங்கள் பகுதி சினிமா தியேட்டரில்  ரிலீசான இந்த படத்தின் முதல் காட்சி டிக்கெட்டுக்கள் அனைத்தையுமே இவரே அள்ளிக் கொண்டு வந்துவிட்டார். 


அப்புறம் என்ன முசாபிரும், அவரது மனைவியும் மட்டும் முதல் காட்சியை பார்த்து ரசித்துள்ளனர். இப்போ முசாபீர் மனைவி செம மகிழ்ச்சியாம். சினிமாவுலதான் இப்படி காட்சி வரும்... இப்போ நேரடியாக நடந்து இருக்கு. இந்த செய்தி தான் பாலிவுட் வட்டாரத்தை கலக்கி வருகிறது.


Find out more: