சென்னை:
கபாலியை கண்டு ஹாலிவுட்டே மிரண்டு போய்தான் கிடக்கு என்று சொல்லணும். ஏன் தெரியுங்களா?
கபாலி டெம்ப்ரேச்சர் நாளுக்கு நாள் டெம்ப்ரேச்சர் ஏறிக்கிட்டே இருக்கு. கபாலி எப்போ ரிலீஸ்ன்னு தெரியாத நிலை நீடிச்சுக்கிட்டு இருக்கு. இதனால் ஹாலிவுட் மிரண்டுதான் போய் கிடக்கு. புரியலையா... கபாலி வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகிடும்னு செய்திகள் வந்தபடி இருக்கு. கபாலி வெளியாகும் இந்த நாளில் இந்தியாவில் எந்த முக்கிய நடிகர்களின் படமும் வெளியாகவில்லையாம்.
தமிழிலும் கபாலி தவிர எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை என்று உறுதியாகிவிட்டது. எனவே சிங்கம் "சோலோவாக" களமிறங்குது.
கபாலி ரிலீசால் இந்தியாவில் குறிப்பாக தமிழில் வெளியாகவுள்ள ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதியையும் ஒத்தி வைச்சுட்டாங்களாம். இப்ப தெரியுதுங்களா? கபாலி ஹாலிவுட்டையும் மிரட்டிட்டார்ன்னு. "கபாலிடா".