'ரஜினி முருகன்' திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரெமோ' திரைப்படத்தின் பின்தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 


இந்த படத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான டைட்டில் சாங்   ஒன்று, அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. 


வரும் அக்டோபர் 7-ந்தேதி, 'ரெமோ' திரைப்படம், திரையரங்கில் ரிலீஸ் ஆகுவதாக அச்சிடப்பட்ட போஸ்டர் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.


மேலும் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்த படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதிஷ், கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: