சென்னை:
ஒரு பக்கம் கபாலி சாதனை என்றால் மறுபக்கம் டிஜிட்டலில் உலா வரப்போகிறாராம் எம்ஜிஆர். என்னங்க புரியலையா...


எம்ஜிஆர் - மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தரராஜன் உட்பட பலர் நடித்த 'ரிக் ஷாக்காரன்' அந்த காலத்தில் பெரிய வெற்றிப்படம். தற்போது இந்த படம் டிஜிட்டலில் உருவாக்கப்பட்டு புதுப்பொலிவுடன் வெளியாக இருக்காம். இந்த தகவல் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இனிப்பை சாப்பிட்டது போல் உள்ளது. 


இன்றும், என்றும், என்றென்றும் தமிழக ரசிகர்களின் உள்ளத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் ரிக் ஷாக்காரன் என்றால் மிகையில்லை. இந்த காலத்திற்கு தகுந்தாற்போல் தற்போது டிஜிட்டல் வடிவில் துல்லியமான ஒளி,ஒலியுடன் இந்த படம் வெளியாக இருக்கிறதாம். இப்படத்தின் டிஜிட்டல் பதிப்பை 'குவாலிட்டி சினிமா' நிறுவன உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார், 'பிலிம் விஷன்' நிறுவன உரிமையாளர் கே. ராமு ஆகியோர் வெளியிடுகின்றனர்


మరింత సమాచారం తెలుసుకోండి: