சென்னை:
கபாலி பல சாதனைகளை செய்து வருவது கண்கூடான விஷயம். இந்நிலையில் படத்தில் வரும் காட்சிகள் உண்மையாகி விடும் போல் உள்ளது. இதில் ஒரு கேங் குரூப் ரஜினிக்கு மிரட்டல் விடுத்துள்ளது என்ற தகவல் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


சூப்பர் ஸ்டார் நடிப்பில் வசூல் வேட்டையாடி வரும் படம் கபாலி. இந்த வசூல் இதுவரை இந்திய சினிமாவே பார்க்காத ஒன்றாக உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக அளவில் இந்த படம் ஏற்படுத்தி உள்ள வசூல் மேளா மற்ற நடிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துதான் விட்டது. இந்நிலையில்தான் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


என்ன தெரியுங்களா? கபாலி படத்தில் வருவது போல் உண்மையாகவே மலேசியாவில் இரண்டு நம்பர் கேங் உள்ளதாம். இதில் ஒரு கேங்கை சார்ந்தவர்கள் கபாலி படத்தில் ரஜினி எங்களை அவமதித்துவிட்டார். ரஜினிக்கு இது எச்சரிக்கை. இனி இப்படிப்பட்ட படங்களில் நடிக்கக்கூடாது. அப்படி தொடர்ந்தால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். 


இதற்கு பதிலடி கொடுப்பது போல் மற்றொரு கேங் ஆள், ஆமாம். ரஜினி எங்க கேங் ஆட்களை பற்றி தான் படத்தில் பல காட்சிகளில் வெளிப்படுத்தினார், உங்களால் என்ன செய்ய முடியும்? என்று பதிலடி தருவது போல் ஒரு வீடியோ உலா வருகிறது. இது என்னடா புது குழப்பம் என்று கோலிவுட் அதிர்ந்து போய் உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: