சென்னை:
இப்படித்தான் நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் என்று வாய்ஸ் விட்டுள்ளார் இவர். யார் தெரியுங்களா?


கபாலியை இயக்கிய ரஞ்சித்தான். கபாலி படம் ரிலீஸ் ஆனப்பிறகு பல வித எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இதுபற்றி சில தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் ரஞ்சித்திடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:


 "கபாலி படத்திற்கு இப்படி விமர்சனங்கள் வரும் என்று எனக்குத் தெரியும். பாட்ஷா மாதிரி படமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், நான் இந்த படத்தை தொடங்கும் போது கூறிவிட்டேன், இது வழக்கமான ரஜினி படம் இல்லை என்று. 


முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரியான படங்களில் ரஜினியின் நடிப்பில் மற்றொரு பரிமாணம் போல்தான் இந்த படத்திலும் ரஜினியை காட்ட நினைத்தேன். ஒரு கேங்க்ஸ்டர், தன்னுடைய மனைவியை தேடி அலையும் உணர்ச்சிகரமான கதைதான் கபாலி.


எல்லா தரப்பு ரசிகர்களையும் குறி வைத்துதான் இப்படத்தை இயக்கினேன். இப்படித்தான் இந்த படத்திற்கு விமர்சனம் வரும் என்று எனக்கு தெரியும். வசூலை பொறுத்தவரை இப்படம் மாபெரும் சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது." என்றார். உண்மைதானே... இது மற்ற ரஜினி படங்கள் போல் இல்லை என்றாலும் இதில் மாறுபட்ட ரஜினியை பார்த்ததாக அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மைதானே!


Find out more: