சூரஜ் இயக்கத்தில், விஷால் மற்றும் தமன்னா ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் 'கத்தி சண்டை'. இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்கிறார். 


இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வரும் ஜூலை 29-ந்தேதி வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகார பூர்வத் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும், முதன்முறையாக விஷால்-தமன்னா ஜோடி சேர்ந்திருக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. காமெடி எண்டெர்டைனர் திரைப்படமாக இப்படம் உருவாகுகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: