
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதை உலகுக்கே வெளிப்படையாக கூறியதாகட்டும், போர்ப்ஸ் பத்திரிகையின் நூறு பணக்கார செலிபிரிட்டி பட்டியலில் அறுபத்தி ஒன்பதாவது இடத்தில வந்ததாகட்டும், கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்கள் கொடுத்தது ஆகட்டும், நயன்தாரா தான் லேடி சூப்பர்ஸ்டார் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில் கோலமாவு கோகிலாவும் இமைக்கா நொடிகள் படமும் இரண்டு வார இடைவெளியில் ரிலீசானத்தை போலவே அடுத்த ஆண்டும் நயனுக்கு அடுத்தடுத்த ரிலீஸ்கள் உள்ளன. ஜனவரியில் முதலாவதாக பொங்கலுக்கு தல அஜித்துடன் நடித்துள்ள விஸ்வாசம் வெளியாக, இதனை அடுத்து ஜனவரி இறுதியில் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லரான கொலையுதிர் காலம் ரிலீசாகும். பிப்ரவரியில் கே.எம்.சார்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா டபுள் ஆக்ஷனில் நடித்து வரும் ஐயா படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது .
click and follow Indiaherald WhatsApp channel