ரஜினி, கமல், பிரபு, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களோடு ஏராளமான திரைப்படங்கள் நடித்தது மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்கள் நடித்து சக்கை போடு போட்ட ராதா நடிகை, திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டுவிட்டு, பிஸினஸ்களில் பணம் சம்பாதித்து வந்தார்.
அதன் பிறகு இவரது மூத்தமகள் கார்த்திகா நாயர், ஜீவா உடன் இணைந்து 'கோ' திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு ஜோடியாக 'வா டீல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவராத நிலையில், கார்த்திகாவுக்கு தற்போது யாரும் படவாய்ப்புகள் கொடுப்பதில்லை.
இதனால் இந்த நடிகையின் அம்மா, நீங்கள் என்ன என் மகளுக்கு வாய்ப்பு கொடுப்பது.... நான் கொடுக்கிறேன் என்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதில் தயாரிக்கும் முதல் படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம்.
மகள் நடிக்கவுள்ள படம் ஓடுமா... அல்லது பிளாப்பா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கணும்.