சென்னை:
எந்த வேடத்திலும் நாங்க ஜொலிப்போம்... ஜொலி... ஜொலிப்போம் என்று நிரூபித்து வருகின்றனர் இவர்கள். யார் தெரியுங்களா?
கோலிவுட் திரையுலகில் நகைச்சுவை, குணசித்திரம் என்று எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்கள் திறமையை வெளிகாட்டி வருகின்றனர் காளிவெங்கட், பாலசரவணன் இருவரும்.
இவர்கள் இருவரும் ஒரு படத்தில் கல்லூரி பேராசிரியர்களாக நடித்துள்ளனர். இயக்குனர் அட்லீயின் உதவியாளர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வரும் பெயரிடப்படாத படம் ஒன்றுக்காக காளிவெங்கட், பாலசரவணன் இருவரும் கல்லூரி பேராசிரியர்களாக நடித்தனராம்.
இவர்கள் இருவரும் வயதான தோற்றத்தில் இருக்கும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.