சென்னை:
அதுல விட்டேன்... இதுல பிடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளார் இவர். யார் தெரியுங்களா?


பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம். இவர் சூப்பர் ஸ்டாரின் நண்பர். இருப்பினும் லிங்கா பிரச்னைக்கு பிறகு அவரது நலம் விரும்பி லிஸ்டில் இருந்து விலகி உள்ளார். 


திருப்பூர் சுப்பிரமணியம்


இப்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் கோவை பகுதி விநியோக உரிமையை வாங்கி இருக்கிறார். ரெமோ படத்தை பொறுத்தவரை இவர்தான் முதல் விநியோகஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினி படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடித்துவிடலாம் என்ற திருப்தியில் உள்ளாராம் திருப்பூர் சுப்பிரமணியம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: