Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடரை இயக்குநர் நீரஜ் பாண்டேவுடன் சிவம் நாயார் இணைந்து இயக்கியுள்ளார். மிக பிரபல நடிகர்களான கே கே மேனன், திவ்யா தத்தா, வினய் பதக், கரண் டக்கர், சஜ்ஜத் டெலஃபுரூஷ், சனா கான், சய்யாமிகெர், மெஹர் விஜ், விபுல் குப்தா, முசாமில் இப்ராஹிம், ஆகியோருடன் மேலும் பலர் நடித்துள்ளனர்.

 

மும்பை 25 பிப்ரவரி 2020 : 19 வருடங்கள், 12 நாடுகள், 6 உளவாளிகள், ஒரு அசகாய சூத்திரதாரி. Hotstar Specials நிறுவனம் Friday Storytellers – the digital arm of Friday Filmworks உடன் இணைந்து வழங்கும் 2020ன் இந்தியாவின் மிகப்பிரமாண்டமான உளவுவகை திரில்லர் இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ). பரபரப்பு மிக்க 8 எபிஸோடுகள் கொண்ட இந்த இணைய தொடர் கடந்த 19 வருடங்களில் இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்திய உளவுத்துறை வேட்டையாடிதை மையமாக கொண்டது. உண்மையில் நடந்த பல சம்பவங்களின் பின்னணியில் இத்தொடர் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2001 ல் இந்திய பாரளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்து அத்றகு முன் 26/11 காஷ்மீர் தாக்குதல் உட்பட பல உண்மை சம்பவங்களை கொண்டு இத்தொடர் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல்களுக்கெல்லாம் பின்னுள்ள ஒரு அசகாய சூத்திரதாரியை தேடிய, இந்திய உளவுத்துறை வரலாற்றின் மிகப்பெரிய தேடுதல் வேட்டை தான் இந்தத்தொடர். Special ops பற்றிய தீவிர ஆய்வுகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு, பல நுண்ணிய விவரங்களுடன் நீரஜ் பாண்டே , தீபக் கிங்ராணி, பெனாஷிர் அலி ஃபிடா ஆகியோர் இத்தொடரின் திரைக்கதையை எழுதியுள்ளனர். உலகின் பல முக்கியமான இடங்களில்  துருக்கி, ஆஜர்பெய்ஜான், ஜோர்டன் முதலான நகரங்கள் உட்பட பலவிதமான லொகேஷன்களில் இத்தொடர் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

 

Hotstar Specials வழங்கும் இந்த ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடரில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களான கே கே மேனன், திவ்யா தத்தா, வினய் பதக், கரண் டக்கர், சஜ்ஜத் டெலஃபுரூஷ், சனா கான், சய்யாமிகெர், மெஹர் விஜ், விபுல் குப்தா, பர்மித் சேதி, கௌதமி கவுர், முசாமில் இப்ராஹிம், ஆகியோருடன் மேலும் பலர் நடித்துள்ளனர்.

Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடர் 17 மார்ச் 2020 பல மொழிகளில் Hotstar VIP தளத்தில் வெளியாகிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: