விஷால் நடித்த 'சமர்' திரைப்பட இயக்குனர் திரு அடுத்து 'கருடா' திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் மாதமே தொடங்குவதாக இருந்தது. 


ஆனால் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹீரோ நடிகர், வேறு ஒரு படத்தில் நடித்து வந்ததால்,இதன் படப்பிடிப்பை தள்ளி வைத்தனர். 


ஆனால், தற்போது அவர் நடித்து வந்த திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்த ஹீரோ இன்னும் 'கருடா' திரைப்படத்தில் நடிக்க தொடங்கவில்லையாம். 


இயக்குனர் அவரை பலமுறை, போனில் தொடர்பு கொண்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்ட பிறகும், அந்த நடிகர் இதுவரை எந்த ஒரு சரியான பதிலும் கூறவில்லையாம். இதனால் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தற்போது மனசங்கடத்தில் இருக்கின்றனராம்.


Find out more: