சென்னை:
படப்பிடிப்பே இன்னும் நிறைவடையவில்லை. பேரு கூட வைக்கலை... அதுக்குள்ளே படம் விற்பனை ஆகிடுச்சு... எந்த படம் தெரியுங்களா?


விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் படப்பிடிப்பு நடக்கும் போதே விற்பனையும் கொடி கட்டி பறக்குதாம். இன்னும் இந்தபடத்திற்கு பெயர் கூட வைக்கலை... அதற்குள்... வியாபாரம் தொடங்கிவிட்டது.


இந்த படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை ஐபேர் என்ற நிறுவனம் ரூ.6.25 கோடிக்கு வாங்கிடுச்சாம்... வாங்கிடுச்சாம். இது கபாலி படத்தின் விற்பனைக்கு அடுத்ததாக மற்றொரு தமிழ் படத்திற்கு கிடைத்துள்ள வியாபாரம் என்கின்றனர். கபாலி படத்தின் கேரளா உரிமை ரூ.7.5 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


அதனால் கபாலி முதல் இடத்திலும்... இப்போ பெயரிடப்படாத விஜய் படம் 2ம் இடத்தையும் பிடிச்சிருக்கு... இது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக உள்ளது. ரஜினிக்கு அடுத்த இடம் விஜய்க்கு என்பதால்....


మరింత సమాచారం తెలుసుకోండి: